தடுப்பூசிகளை வழங்குவதில் புதிய சாதனை இங்கிலாந்து அரசு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,587 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2021-03-22 08:30 GMT

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,587 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 96 கொரோனா இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை நேற்றைய பாதிப்புகள் முறையே 101 மற்றும் 4,802 ஆக உள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை இப்போது 26.9 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஒரே நாளில் 711,156 முதல் மற்றும் இரண்டாவது அளவு தடுப்பூசிகளை வழங்குவதில் புதிய சாதனை படைத்துள்ளதாகவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News