கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பொது ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதியவகை கொரோனா வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் பொதுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டு மக்களிடையே பேசிய ஜெர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல், அச்சுறுத்தும் வகையில் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். புதிய வகை கொரோனா தொற்று ஜெர்மனியில் பரவியுள்ளதைத் தொடர்ந்து பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.