தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு: 3 பெண்கள் பலி

Update: 2021-02-25 11:45 GMT

இந்தோனேசியா நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிய தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் பலியானார்கள்.

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் செயல்பட்டு வந்த சட்ட விரோத தங்கச் சுரங்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 23 பேர் அங்கு பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் அவர்கள் அனைவரும் மண்ணில் புதைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் 15 பேரை உயிரிருடன் மீட்டனர். 3 பெண்கள் பலியானார்கள்.மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News