இன்டர்நெட்எக்ஸ்ப்ளோரர் ஜுன் மாதம்முதல்நிறுத்தம் மைக்ரோசாப்ட்அறிவிப்பு
2003 ஆம் ஆண்டு இணைய சேவையில் 95 சதவீதம் பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தினர்.2008 ம் ஆண்டு முதல் குறைய தொடங்கியது
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஜுன் 15, 2022க்கு பிறகு செயல்படாது மைக்ரோசாப்ட்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஓர் மல்ட்டி நேஷனல் சாப்ட்வேர் நிறுவனம். இது உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை சாப்ட்வேர்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது.
வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில்கேட்சும்,பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975ம் ஆண்டு நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் சாப்ட்வேர் கிரியேட்டராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்த மதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும்.
கடந்த 25 வருடங்களாக பயன்பாட்டிலிருந்து போதிய வரவேற்று இல்லாததால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஜுன் 15, 2022க்கு பிறகு செயல்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவைக்கான ஆதரவை நிறுத்த துவங்கியது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவை ஆரம்ப காலத்தில் அதிக பிரபலமான பிரவுசராக இருந்தது.
விண்டோஸ் 10 இயங்குதளத்தின் சில வெர்ஷன்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 டெஸ்க்டாப் செயலிக்கான ஆதரவு ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது. மைக்ரோசாப்ட் எட்ஜ் அதிக திறன் கொண்டிருப்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்ததாக தெரிகிறது.
2003 ஆம் ஆண்டு இணைய சேவையில் 95 சதவீதம் பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தினர். எனினும், 2004 மற்றும் 2008 ஆண் ஆண்டுகளில் துவங்கப்பட்ட பயர்பாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் பிரவுசர்கள் அறிமுகமானதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவைக்கான பயனர்கள் எண்ணிக்கை குறைய துவங்கியது.இதனையடுத்து மைக்ரோசாப்ட் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது அதன்படி கடந்த 25 வருடங்களாக பயன்பாட்டிலிருந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஜுன் 15, 2022க்கு பிறகு செயல்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.