உக்ரைனில் சிக்கி தவித்த 219 பேர் இந்தியா புறப்பட்டனர்
உக்ரைனில் சிக்கித்தவித்த 219 இந்தியர்கள் ருமேனியா நாட்டிலிருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர்.;
உக்ரைனில் சிக்கித்தவித்த 219 இந்தியர்கள் ருமேனியா நாட்டிலிருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர்.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கு இந்தியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் இந்தியாவுக்கு மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இன்னும் தமிழக மாணவ, மாணவிகள் சுரங்கப்பாதையில் சிக்கி கொண்ட நிலையில் இன்று உக்ரைனிலிருந்து தப்பி ருமேனியாவுக்கு சென்ற இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைத்தொடர்ந்து இன்று உக்ரைனில் சிக்கி தவித்த 219 இந்தியர்கள் ருமேனியா நாட்டிலிருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.