சர்வதேச குடும்ப தினம் - இன்று
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து - தனிக் குடும்பங்களாய்.
சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வலியுறுத்தி ஆண்டுதோறும் மே மாதம் 15-ம் தேதி 'சர்வதேச குடும்ப தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது..
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி சர்வதேச குடும்ப தினம் மே 15 ம் தேதி அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.