முன் அறிவிப்பின்றி நாடு முழுவதும் இறங்கியுள்ள இராணுவம் !

Update: 2021-03-21 05:00 GMT

இலங்கை நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தபோலீசாரின் தலைமையில் இராணுவத்தினரால்  சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் எவ்வித அறிவிப்பும்  இன்றி திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கூறியுள்ளார் .

சிறப்பு கண்காணிப்பு  நடவடிக்கை தொடர்பான அரசு அறிவிக்கப்பட்டால் குற்றவாளிகள் தலைமறைவாக வாய்ப்பாகிவிடும் என பாதுகாப்புஅமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.எனவே24 மணி நேரமும் சிறப்பு கண்காணிப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனஅமைச்சர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News