சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

Update: 2021-03-20 07:00 GMT

சவூதி அரேபியாவின் ரியாத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்து எரிவதாக சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானுடன் தொடர்புடைய ஹவுத்தி போராளிக் குழு, ரியாத்தில் ஒரு சவூதி அராம்கோ நிலையத்தை, ஆறு ஆயுத ட்ரோன்களை பயன்படுத்தித் தாக்கியதாகக் கூறியுள்ளது.

அதோடு ஹவுத்தி குழுவின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா, இலக்குகள் சரியாகத் தாக்கப்பட்டன என்று கூறியதாக வளைகுடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த விஷயத்தில் சவூதி அராம்கோ நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.சமீப காலங்களில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி மீதான தாக்குதல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News