இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபட்சே இரண்டு நாள் ,இருநாடுகளுக்கும் பரஸ்பர உறவுகளுக்காக இன்று காலை பங்களாதேஷ் சென்றார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பி பேரில் அங்கு பயணம் செய்யும் மஹிந்த ராஜபட்சே அந்நாட்டின் தேச பிதாவான ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவிலும், பங்களாதேஷ் சுதந்திர பொன்விழா நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளதாக உள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபட்சே, இந்த இருநாடுகளுக்கும் பரஸ்பர பயணத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம்,தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது என இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.