2 வாரத்திற்குப் பிறகு பரவும் வைரஸ்

Update: 2021-03-14 05:30 GMT

ஆஸ்திரேலியாவில், 2 வாரத்திற்குப் பிறகு கோரோனா கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் மருத்துவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பிய 2 நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார்.அவர்களுக்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகைக் கிருமி தொற்றியிருந்தது.இதையடுத்து குறித்த மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானதற்கு முன்னர், அந்த மருத்துவர் எத்தனை பேருக்குச் சிகிச்சை அளித்திருப்பார் என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை.

இந்நிலையில், குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் ,தங்கும் விடுதிகளும்  மூடப்பட்டிருக்கும். இதேவேளை ஆஸ்திரேலியாவில் 29,000-க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News