கொழும்பில் கண்டெய்னர் முனையம் அமைக்க அனுமதி

Update: 2021-03-03 06:02 GMT

இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் இலங்கை அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் துறைமுக ஊழியர் சங்கங்களின் போராட்டம் காரணமாக, இந்திய மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் இத்திட்டப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டன. தற்போது மேற்கு பகுதியில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சரக்குப் பெட்டக முனையம் அமைக்க இந்தியா தரப்பில் அதானி நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. 

Tags:    

Similar News