ஐ.நா., வளர்ச்சி திட்டப் பிரிவின் நேர் உதவிச் செயலராக, இந்தியாவைச் சேர்ந்த உஷா ராவ் மோனரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா., வளர்ச்சி திட்டப் பிரிவு, உலகின் பல்வேறு நாடுகளில், ஐ.நா., நிதியுதவியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் நேர் உதவிச் செயலராக, இந்தியாவைச் சேர்ந்த உஷா ராவ் மோனரி நியமிக்கப்பட்டுள்ளார். உஷா ராவ் மோனரி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அடிப்படை கட்டமைப்பு துறை முதலீடுகளில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.