வாட்ஸ்அப் புதிய அப்டேட்ஸ்
வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் தங்கள் பயன்பாட்டிலிருந்து 'லாக் அவுட்' செய்யும் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளமுடியும், நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கவும் முடியும் என்ற புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சத்தின்படி, அதன் பயனர்கள் தங்கள் மொபைல் போன் சாதனங்களிலிருந்து லாக் அவுட் செய்ய அனுமதிக்கிறது. WABeta வெளியிட்ட அறிக்கையின்படி, பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க முடியாது, மாறாக அவர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து 'லாக் அவுட்' செய்ய முடியும். மேலும் பயனர்கள் இப்போது ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கிறது.
"தற்போது இணையத்துடன் இணைக்க உங்கள் பிரதான தொலைபேசி இல்லாமலேயே நீங்கள் வாட்ஸ்அப் வெப்-யை பயன்படுத்தலாம்" என்று வாட்ஸப்பால் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின் சமூக ஊடக நுகர்வுகளை கண்காணிக்கவும் உதவும், ஏனெனில் அவர்கள் தொலைபேசியிலிருந்து வெளியேறி, அவர்கள் விரும்பும் போதெல்லாம் உள்நுழைய முடியும். இந்த ஆப்ஷன் இருக்கும் போதும் மிகப்பெரிய பிரைவசி ஆகவும் இருக்கும்.