ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
ஓமன் நாட்டுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா விநியோகித்ததற்காக சுல்தான், பிரதமர் மோடியை பாராட்டினார். பெருந்தொற்றுக்கு எதிராக இணைந்து போராடுவதற்கான ஒத்துழைப்பை தக்க வைத்துக் கொள்வது என இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியா-ஓமன் ஒத்துழைப்பு வளர்ந்து வருவது குறித்து இருவரும் திருப்தி தெரிவித்தனர். மேலும் பொருளாதார, பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தி வரும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்கினை இரண்டு தலைவர்களும் பாராட்டினர்.