கொரோனா தொற்றினை கருத்தில்கொண்டு கடந்த மாதம் மூடப்பட்ட 20 எல்லைப் பகுதிகளை இன்று தென்னாபிரிக்கா திறந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அங்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா நாட்டில் 20 எல்லைப் பகுதிகள் மூடப்பட்டது. இந்நிலையில் தொற்று குறைந்து வருவதால் மீண்டும் மூடப்பட்ட 20 எல்லைப் பகுதிகளை இன்று தென்னாபிரிக்கா திறந்துள்ளது.