காதலர் தின கொண்டாட்டம்: இலங்கை அரசு தடை

Update: 2021-02-11 04:45 GMT

காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. விதிமுறைகள், தடைகளை மீறி வரும் பிரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களும், பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடக பேச்சாளர் மாஅதிபர் அஜித் ரோகன, சுகாதாரத் துறையின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Similar News