செவ்வாய் கிரக சுற்றுபாதையை அடைந்த ஹோப்

Update: 2021-02-10 10:48 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தால் தயாரிக்கப்பட்ட ஹோப் விண்கலம் நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்ட குறித்த விண்கலம் நேற்றிரவு செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையை அடைந்ததாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தநிலையில் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் 1062 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு காலநிலை, பனி மற்றும் அங்குள்ள காற்றின் மூலக்கூறுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Tags:    

Similar News