மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை எதிா்த்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, யாங்கூன் நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடத்தினா். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊா்வலமாக சென்ற அவா்கள், மையப் பகுதியில் அமைந்துள்ள சுலே ஸ்தூபி அருகே ஒன்று கூடினா்.கலைக்கப்பட்ட அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் ராணுவ சா்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும் அவா்கள் கோஷங்கள் எழுப்பினா். புரட்சியின் அடையாளமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.