மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
மியான்மர் அரசை திங்கட்கிழமை அந்நாட்டு ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்நாட்டின் மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டம் மீதான நேரடித் தாக்குதல் என்று கூறினார்.