பத்திரிகையாளர் கொலை வழக்கு- 4 பேர் விடுதலை

Update: 2021-01-29 07:01 GMT

அமெரிக்க பத்திரிகையாளர் டானியல் பேர்ளை படுகொலை செய்த நால்வரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது.

வோல்ஸ்ரீட் ஜேர்னலின் தென்னாசிய பணியகத்தின் தலைவராக பணியாற்றிக்கொண்டிருந்த டானியல் பேர்ள் 2002ம் ஆண்டு பாக்கிஸ்தானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.டானியல் பேர்ள் கொல்லப்படுவதை படமெடுத்து பயங்கரவாதிகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 2002 ம் ஆண்டு நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் டானியல்பேர்ள் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் விடுதலை செய்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினால் டானியல் பேர்ள் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News