குடியரசு தினம்- இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து

Update: 2021-01-26 08:02 GMT

72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உலகின் மிகப்பெரிய இறையாண்மை கொண்ட ஜனநாயகம், இந்தியா. எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்தேன், ஆனால் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதையும், எங்கள் நட்பை வலுப்படுத்துவதையும், பிரதமர் மோடியும் நானும் சாதிக்க உறுதியளித்திருப்பது, எங்கள் உறவில் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.இந்தியாவில் உள்ள அனைவருக்கும், இங்கு இங்கிலாந்தில் கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான குடியரசு தினமாக அமைய வாழ்த்துகிறேன் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News