உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9.93 கோடியாக உயர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,93,24,198 பேருக்கு அந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 21,30,341 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 7,13,69,788 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,58,23,680 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.அவர்களில் 1,10,665 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்தியாவில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரத்து 435க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 376 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.