கொள்கை முடிவுகளை மாற்றிய ஜோ பைடன்

Update: 2021-01-21 12:32 GMT

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார் .

கொரோனா தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

Tags:    

Similar News