அமெரிக்க அதிபராக மக்களுக்கு ஜோ பைடன் உரை
அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது - ஜோ பைடன்;
அமெரிக்காவின் மரபுபடி ஜனவரி 20 இன்று 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு அமெரிக்க நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாடினார்.
அந்த உரையில் தெரிவித்த முக்கிய அம்சங்கள் :
அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது. ஜிம்மி கார்ட்டரின் வாழ்த்துகளைப் பெற்றேன். ஜார்ஜ் வாஷிங்டன் ஏற்ற முதலாவது பிரமாணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அழகான ஐக்கிய அமெரிக்காவை நாட்டு மக்கள் விரும்புகின்றனர். நாம் பயணிக்க வேண்டிய தொலைவு, பணிகள், சீரமைப்புகள், சவால்கள் என நிறையவே இருக்கின்றன
100 ஆண்டுகளுக்குப் பின் கொரோனா எனும் பெருந்தொற்று அமெரிக்காவை தாக்கி உள்ளது, கொரோனா பெருந்தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அனைவருக்குமான சமமான நீதி என்பதை தாமதப்படுத்தமாட்டோம். அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிய வேண்டிய தேவை உள்ளது.
அமெரிக்கர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்து தீவிரவாதங்களையும் முறியடிக்க வேண்டும், நமது வரலாறு போராட்டங்கள், சவால்களை எதிர்கொண்டவை. உலக யுத்தம், பொருளாதார சரிவு என அத்தனையில் இருந்தும் மீண்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் ஆகப்பெரும் பலமே ஒற்றுமை- ஒற்றுமையால்தான் வளர்ச்சி சாத்தியம்.