அமெரிக்கா அதிபராக ஜோபைடன் பதவியேற்றார்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.;
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், மைக் பென்ஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு ஜோபிடன் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடினார்கள்.
டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறினார். அதிபர் பதவி ஏற்பு விழாவிலும் முன்னாள் அதிபர் என்ற முறையில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை.