வாஷிங்டனில் ஆயுதங்களுடன் சிக்கிய நபர்

Update: 2021-01-17 06:44 GMT

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வாஷிங்டன் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதமேந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று மூலம் வாஷிங்டனுக்குள் நுழைய முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவரை சோதனை செய்ததில் அவரிடம் கைத்துப்பாக்கி, 500 தோட்டாக்கள், இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டதுடன் வாஷிங்டனில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது.

Tags:    

Similar News