கொரோனா எதிராெலி கனடாவில் ஊரடங்கு அமல்

Update: 2021-01-11 12:15 GMT

கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் 2 ம் கட்ட அலை பரவி வருகிறது. இது கனடா நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் கடந்த ஜனவரி ஒன்று முதல் ஏழாம் தேதி வரை சராசரியாக நாளுக்கு இரண்டாயிரத்து 500 கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இந்த மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இந்நிலையில், கனடாவில் உள்ளூர் நேரப்படி இரவு எட்டு மணிமுதல் அதிகாலை ஐந்து மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஆறாயிரம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News