அமெரிக்காவில் இன்று நடைபெற்ற சம்பவம் ஜனநாயகம் பலவீனமாக இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது என ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தை இன்று தற்போதைய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விரைவில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோபைடன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,இன்று ஜனநாயகம் பலவீனமாக இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது, வேதனை தரும் ஒரு நினைவூட்டல். அதை பாதுகாக்க நல்ல எண்ணம் கொண்ட தலைவர்கள், எழுந்து நிற்க தைரியம், தனிப்பட்ட நலனை தேடாமல் பொது நன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட தலைவர்கள் தேவை என பதிவிட்டுள்ளார்.