கனடாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளது.
உலகையே தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் பொதுமக்களின் வாழ்க்கை முறையையே இது புரட்டி போட்டுள்ளது. உலக நாடுகள் இன்னமும் இதிலிருந்து விடுபடவில்லை. இதில் கனடாவில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 6,06,076 ஆகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15,880 ஆகியுள்ளது.கடந்த வாரத்தில், சராசரியாக நாளொன்றிற்கு 2,792 பேருக்கு தொற்று பரவி அதிகரித்து வந்ததுடன், ஒரே நாளில் 3,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட மற்றொரு மாகாணமான கியூபெக்கில் 2020 டிசம்பர் 31 தேதிக்கு பின் 7,663 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 121 பேர் பலியாகியுள்ளார்கள்.