வகுப்புகளுக்கும் தேர்வுகளுக்கும் நேரடியாக மாணவர்கள் திரும்ப வேண்டும் என மலேசிய கல்வித்துறை விடுத்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மலேசியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் சம்பவங்கள் கடந்த இரு மாதங்களாக ஆயிரகணக்கில் பதிவாகி வருவதால் மாணவர்கள் ஒன்றுகூடும் போது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது. கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு நியாயமற்றது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாக சேரும்போது கொரோனா பரவல் அபாயம் அதிகமாகும் என்றும் பெற்றோ் தரப்பில் தெரிவிக்கபட்டது.