அப்பாவி பொதுமக்களை கொன்று வருகிறோம்:ரஷ்ய வீரர்கள்

அப்பாவி பொதுமக்களை கொன்று வருகிறோம் என ரஷ்ய வீரர்கள் கதறி அழும் வீடியோ வெளியாகிவுள்ளது.;

Update: 2022-03-03 05:00 GMT

உக்ரைன் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள்


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர்தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் வீரர்களும், பொதுமக்களும் ரஷ்ய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர், ரஷ்ய ராணுவ வீரர்களை நாங்கள் சிறைபிடித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் இதனை யாரும் நம்பாத நிலையில், நேற்று உக்ரைன் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் கண்ணீருடன் பேசும் வீடியோ என்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ரஷ்ய ராணுவ வீரர்கள், தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது எனவும், அமைதியாக வாழும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று வருவதாகவும் தாங்கள் பீரங்கிகளுக்கு தீவனமாக மாறி விட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் ரஷ்ய ராணுவத்தினர் தங்கள் சக வீரர்களின் சடலங்களைக்கூட எடுப்பதில்லை எனவும், இறுதி சடங்கு செய்வது கூட இல்லை எனவும் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News