எப்போது, எங்கே காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரை கடக்கும்? புதிய தகவல்

காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், புதுச்சேரிக்கு வடக்கே , இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-11 01:45 GMT

நன்றி: வானிலை ஆய்வு மையம், சென்னை

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, நேற்றிரவு நிலவரப்படி, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தது.

இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில், கடலில் 60-70 கிலோ மீட்டர் வேகத்திலும், கரை பகுதியில் அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். நாற்பது கி.மீ. வேகத்தில் கூட காற்றின் வேகம் இருக்கலாம் என்றார்.

Tags:    

Similar News