காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய கன மழை
காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.;
காஞ்சிபுரத்தில் பெய்த மழை
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மண்டலம் அறிவித்தது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இரு தினங்களாக கடும் கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இன்று காலை 7 மணி முதலே கடும் வெப்பத்தால் வாகன ஓட்டிகள் மூத்த குடிமக்கள் என பலர் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் மாலை நாலு மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை தற்போது வரை பெய்து வருகிறது.
திடீர் கனமழையால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று சூழலில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். மேலும் சரியான சூழலில் தற்போது மழை உதவி செய்து வருவதாக விவசாயிகளும் தெரிவித்து வருகின்றனர்.