தமிழகத்தில் வெப்பம் மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-06-06 04:02 GMT

வெயில் (பைல் படம்).

தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 104.18 டிகிரி - (40.1 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

கடலூர் - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

ஈரோடு - 101.12 டிகிரி - (38.4 செல்சியஸ்)

கரூர் - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

மதுரை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

நாகை - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 104 டிகிரி - (40 செல்சியஸ்)

தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

திருப்பத்தூர் - 101.84 டிகிரி - (38.8 செல்சியஸ்)

திருச்சி - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

திருத்தணி - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)

தூத்துக்குடி - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

வேலூர் - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ம் தேதி முதல் 9-ந்தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News