107 டிகிரி வெயில்... முடியல சாமி... கவலைய விடுங்க! மழை வருதுங்க!
தகதகக்கும் வெயிலில் வாடியவர்கள் வெந்து வெந்து நொந்தவர்கள் சூரியனை கரித்துக் கொட்டியவர்கள் அனைவரும் மனம் குளிரும் வகையில் ஒரு சூப்பரான தகவலைத் தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தனை நாள் வெயிலில் வெந்தவர்களுக்கு நற்செய்தியாக மழை வருகிறது என்கிற அப்டேட் கொடுத்துள்ளது.;
தகதகக்கும் வெயிலில் வாடியவர்கள் வெந்து வெந்து நொந்தவர்கள் சூரியனை கரித்துக் கொட்டியவர்கள் அனைவரும் மனம் குளிரும் வகையில் ஒரு சூப்பரான தகவலைத் தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தனை நாள் வெயிலில் வெந்தவர்களுக்கு நற்செய்தியாக மழை வருகிறது என்கிற அப்டேட் கொடுத்துள்ளது.
ஏப்ரல் முடியவே இப்படி வெயில் அடிக்குதே மே மாதம் உயிரோட இருப்போமா என்கிற அளவுக்கு மக்கள் மிகுந்த உளைச்சலில் இருக்கிறார்கள். வெயில் காலை 7 மணிக்கே துவங்கி மாலை 7 மணி வரை வாட்டி வதைக்கிறது. அடுத்த ஷிப்டுக்கு வெக்கையும் புழுக்கமும் வந்துவிடுகிறது. இதனால் மிகவும் வருத்ததில் இருக்கிறார்கள் மக்கள் அனைவரும்.
கரூரின் பரமத்தியில் 107 டிகிரி தமிழகத்திலேயே அதிகபட்சமாக வெயில் பதிவாகியிருந்தது. இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகியிருக்கிறது. இதனால் வருத்தத்தில் இருந்த மக்களை குஷிப் படுத்தும் விதமாக வானிலை ஆய்வு மையம் மழை வருகிறது என கூறியுள்ளது.
கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தின் ஒரு சில நகரங்களில் மழை பெய்து வருகிறது. கொமுகி, வால்பாறை மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை இருந்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.
இன்று இரவு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை இருக்கும் எனவும், அநேக இடங்களில் லேசான மழைத் தூறலும், சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு மழை வர வாய்ப்பிருக்கிறது.
ஆனாலும் சில இடங்களில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தும் எனவும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.