அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அரபிக் கடலில் புயலுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-21 01:14 GMT

அரபிக் கடலில் மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று நள்ளிரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவியது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவியது. இந்த நிலையில் தற்போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும். இந்த புயலுக்கு தேஜ் என இந்தியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மற்றும் வடக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் நிலவி வருவதால், வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். இந்த நிலையில் புயல் வலுக்குறைந்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News