தமிழகத்தில் மீண்டும் வரப்போகிறது மழை: 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மீண்டும் மழை வரப்போகிறது, 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2023-05-22 07:37 GMT

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (கோப்பு படம்)

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 4ந்தேதி அக்னி நட்சத்திரம் எனப்படம் கத்தரி வெயில் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அவதி அடைந்து வருகிறார்கள்.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் அளவு பதிவாகி இருந்தது. இந்நிலையில் அக்கினி நட்டத்திரம் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்த மழை மக்களை ஓரளவு பாதுகாத்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. வெயில் மீண்டும் தனது கோரமுகத்தை காட்ட தொடங்கியது.

இதன் காரணமாக கடந்த வாரம் தமிழகத்தின் திருத்தணி, வேலூர் உள்பட 20 மாவட்டங்களில் வெயில் அளவானது 107 டிகிரி வரை பதிவானது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாண்டவம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 16ம் தேதி வரை 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த மழையானது நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, சேலம் ஆகிய 13 மாவட்டங்களில் பெய்யும் என்றும் அதிலும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், தேனி  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதே நேரத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News