தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-08-06 04:03 GMT

பைல் படம்.

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News