ஆரஞ்சு அலெர்ட்! 5 மாவட்டங்களுக்கு கனமழை..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது.

Update: 2024-06-26 06:45 GMT

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஏற்கனவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுக்க இந்த ஆண்டு வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நீலகிரியிலும் அதிக வெயில் காணப்பட்டது. இதனால் கோடை காலத்தில் ஊட்டியில் கூட பெரிய அளவில் வெப்பம் காணப்பட்டது. கோடை மழை பெய்யாததால் உழவர்களும் கவலையில் இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர்,பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மக்கள் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். கனமழைக்கு தொடர் வாய்ப்பு இருப்பதால் கூடுமானவரையில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வது, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கிமீ முதல் 42 கிமீ வரை வேகமாக வீசக்கூடும். இதனால் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 27ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலையோரப் பகுதிகளில் கடுமையான கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. 

Tags:    

Similar News