இன்று எங்கெல்லாம் மழை? வானிலை சொல்வதென்ன?

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-08-31 10:46 GMT

பைல் படம்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பல இடங்களில் மதியம் முதல் மழை பெய்து வருகிறது.

மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் வானிலை இப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட நமக்கு நற்செய்தியாக நாளையும் சில மாவட்டங்களில் மழை இருப்பது தெரியவருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் பிறக்கும்போதே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழையை கையோடு கொண்டு வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம். சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை போல சென்னையில் ஆங்காங்கே மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மழை பெய்யும் அறிகுறிகளுடன் காட்சிகள் மாறி வருகின்றன. 

Tags:    

Similar News