வங்கக் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்தம் புயலாக மாறியது
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ளபுதிய காற்றழுத்தம் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
வடக்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 24ம் தேதிக்குள் புயலாக தீவிரமடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
26ம் தேதி ஒடிசா, மேற்கு வங்க கடற்கரைகளையொட்டி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு 'யாஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. மல்லிகை என்ற அர்த்தம் கொண்ட யாஸ். ஓமன் நாடு பரிந்துரைந்த பெயராகும்.
யாஸ் புயலை எதிர்கொள்ள தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.