தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2024-08-11 11:18 GMT

பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை வரப்பிரசாதமாக இருந்தாலும், பல மாநிலங்களில் மழை பேரிடராக மாறியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மலைப்பிரதேச மாநிலங்களில் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டு உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வானிலை இதமானதாக மாறியது மட்டுமின்றி, மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கனமழை காரணமாக கங்காபூர் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் கூறியதாவது: கடந்த சில நாட்களாக வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் தென்கிழக்கு உத்தரபிரதேசத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக வடமேற்கு பகுதியில் மழை பெய்து வருவதாகவும் தெரிவித்தார்.கிழக்கு ராஜஸ்தானில் 12-19 செ.மீ மழை பெய்யக்கூடும்

நேற்று அதாவது சனிக்கிழமை கிழக்கு ராஜஸ்தானில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது என்றார். கிழக்கு ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமையும் 12-19 செ.மீ மழை பெய்யக்கூடும் என்றார்.

விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் மேலும் கூறுகையில், "பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 12-20 செ.மீ., மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் ராஜஸ்தானுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி-என்சிஆர் பகுதியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

தென்னிந்தியா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்றார். டெல்லி என்சிஆர் பகுதியில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தலைநகர் டெல்லி-என்சிஆர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நல்ல மழை பெய்தது. இருப்பினும், டெல்லியில் பெய்த மழையால் நஜாப்கர் உட்பட பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

Similar News