நீலகிரி, கோவைக்கு இன்று கனமழை வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று (ஜூன் 14) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-14 04:40 GMT

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தமிழகத்தில், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.மன்னார் வளைகுடா, தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில், நாளை வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். அரபிக்கடல் பகுதிகளில், 17ம் தேதி வரை மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News