தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் பெய்ய போகிறது கன மழை

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் கன மழைபெய்ய போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2023-11-13 10:34 GMT

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் வைகை அணை நிரம்பி விட்டது.

இது தவிர ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய ஏழு கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அங்கு மொத்தம் பத்து குழுவினர்  உரிய மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 250 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News