இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் வெளியிட்ட புது தகவல்

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-17 03:30 GMT

கோப்பு படம்

வங்கக்கடலில், மத்திய மேற்கு பகுதியில், காற்றழுத்தத்தாழ்வு பகுதி நிலவுகிறது. அதேபோல், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கேரளா - லட்சத்தீவு கடலோர பகுதியில், இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருக்கிறது. இதனால், தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளா, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலுார், பெரம்பலுார், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய, 14 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News