ஐஸ்கிரீமில் மனிதவிரல்..! அதிர்ந்த மும்பை பெண் டாக்டர்..!

ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த பெண் டாக்டருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Update: 2024-06-13 07:40 GMT

Mumbai Woman Orders Ice Cream, Finds Human Finger Inside, Finger in Ice Cream, Yummo Ice Cream, Mumbai News Today in Tamil, Ordered the Cone Ice Cream Online from Yummo Ice Creams

'இது மனித விரல் சேர்க்கப்பட்ட ஸ்பெஷல் ஐஸ்கிரீம்' என்று விளம்பரம் செய்யலாம் போலுள்ளது, இந்த சம்பவம். நீங்களும் இதை படித்துப்பாருங்கள். 

ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மலாட்டின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஓர்லெம் பிராண்டன் செராவ், Yummo ஐஸ்கிரீம்களில் இருந்து ஆன்லைனில் கோன் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்திருந்தார்.

ஐஸ்கிரீம் வந்ததும் ஆவலோடு பிரித்து சாப்பிடமுற்பட்டபோது, உள்ளே ஒரு அசாதாரண பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நல்லவேளையாக அவர் அதை விழுங்கவில்லை. அது ஏதோ உணவுசார்ந்த பொருள் என்றுதான் முதலில் எண்ணி இருப்பார். பின்னர்தான்  அந்த ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருப்பது தெரியவந்தது.

Mumbai Woman Orders Ice Cream

ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய ஐஸ்கிரீம் புகைப்படத்தை அந்த டாக்டர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் ஐஸ்கிரீமிற்குள் மனித விரல் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பது வெளியே தெரிகிறது.

திரு செர்ராவ் தனது வேதனையான அனுபவத்தை ஒரு வீடியோ அறிக்கையில் பகிர்ந்து கொண்டார். இது ஒரு கொட்டையாக இருக்கலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதை நான் விழுங்கவில்லை.

"நான் ஒரு ஆப்பில் இருந்து மூன்று கோன் ஐஸ்கிரீம்களை ஆர்டர் செய்திருந்தேன். அதில் ஒன்று யம்மோ பிராண்டின் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம். பாதியை சாப்பிட்டதும் வாயில் திடமான துண்டானது. அது நட்டு அல்லது சாக்லேட் பீஸ் என நினைத்தேன். அது என்ன என்பதைச் சரிபார்க்க அதைத் துப்பிப் பார்த்தேன் " என்று திரு செராவ் ஒரு வீடியோ அறிக்கையில் கூறியுள்ளார்.

Mumbai Woman Orders Ice Cream

அதிர்ச்சியடைந்த அவர் வெறுப்பின் உச்சத்தில் அவர் புகார் அளிப்பதற்காக ஐஸ்கிரீமுடன் மலாட் காவல் நிலையத்திற்கு ஓடினார். உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக யம்மோ மீது இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் ஐஸ்கிரீமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுடன் விரலை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

உணவுப் பொருளில் உடல் உறுப்பு இருப்பதும் சதி என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News