பால் பூத்தில் ரூ.50,000 மற்றும் நகை திருட்டு

மோகனூர் பால் பூத்தில் பணியாற்றும் பெண் பணியாளரிடம் மர்ம நபர்கள் ரூ.50,000 திருடிச் சென்றதாக கூறப்படுகிறது;

Update: 2025-04-08 08:40 GMT

பால் பூத்தில் பணியாற்றும் பெண் பணியாளரிடம் ரூ.50,000 மற்றும் நகை திருட்டு – மர்ம நபர்களை தேடும் போலீசார்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் முத்துராஜா தெருவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 60) கடந்த பல ஆண்டுகளாக மோகனூரில் உள்ள ஆரோக்கியா எனும் தனியார் பால் பூத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில், தனது வழக்கமான பணிக்காக பால் பூத்திற்கு சென்ற கோவிந்தம்மாள், வீட்டிலிருந்து ₹50,000 ரொக்கம் மற்றும் முக்கால் பவுன் தங்க நகையை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றார். பால் பூத்திற்கு  வந்ததும், அந்த பையை கல்லா பெட்டி அருகில் வைத்துவிட்டு தனது பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், பால் பூத்திற்கு வந்த மர்ம நபர்கள், அவரது கவனத்தை வேறு திசைக்கு திருப்பியபோது, பையை எடுத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. திருட்டு நடந்தது பின்னர் தெரியவந்த நிலையில், கோவிந்தம்மாள் மோகனூர் போலீஸில் புகார் செய்தார்.

தகவல் அறிந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களை அடையாளம் காணும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News