நரைக்கு டை அடிப்பது தெரியும்..! இந்த இளைஞன் செய்த காரியத்தை படீங்க..!

நரைமுடியை மறைப்பதற்கு வயதானவர்கள் கருப்பு சாயம் (ஹேர் டை ) பூசுவது வழக்கம். இது நாம் எல்லாம் அறிந்த ஒன்றே. ஆனால் டில்லியில் நடந்த இந்த சம்பவத்தை படீங்க.சிரிப்பீங்க.;

Update: 2024-06-20 05:41 GMT

getup changed youth in tamil-வயதான தோற்றத்தில் 

Getup Changed Youth in Tamil

வயதானவர்கள் இளமையாகத் தோன்றுவதற்கான நரைத்த முடியை டை அடித்து கருப்பு நிறமாக மாற்றுவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்கு நேர்மாறான ஒரு சம்பவம் நகைச்சுவையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. என்ன நடந்துள்ளது என்று படீங்க.

Getup Changed Youth in Tamil

ஒரு வயதான தோற்றத்தில் மூத்த குடிமகனாக தோன்ற வேண்டும் என்பதற்காகவே முடி மற்றும் தாடிக்கு வெள்ளை சாயம் பூசப்பட்ட ஒரு 24 வயது வாலிபன், கனடாவுக்கு விமானத்தில் ஏற முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார்.


குரு சேவக் சிங், 24, நேற்று முன்தினம் (18ம் தேதி) இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தின் டெர்மினல்-3 இல் CISF அதிகாரிகளால் அவர் பிடிபட்டார். பிடிபட்ட அவர் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வயதான தோற்றத்தில் இருந்த அந்த நபரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் முதலில் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அவர் முதலில் தனது உண்மையான பெயரை மாற்றி அடையாளத்தை மறைத்து ரஷ்விந்தர் சிங் சஹோதா, 67 என்ற போலி பெயர் கொண்ட பாஸ்போர்ட் ஒன்றை தயாரித்திருந்தார். டெல்லியில் இருந்து புறப்படும் ஏர் கனடா விமானத்தில் அவர் செல்வதற்காக வந்திருந்தார்.

"பாஸ்போர்ட்டில் வழங்கப்பட்ட விவரங்களை விட அந்த மனிதனின் தோற்றம், குரல் மற்றும் தோலின் அமைப்பு மிகவும் இளமையாகத் தெரிந்தது. கூர்ந்து கவனித்ததில், அவர் தனது தலைமுடி மற்றும் தாடிக்கு வெண்மையாக சாயம் பூசி இருப்பது தெரிந்தது. மேலும் வயதானவராகத் தோன்றுவதற்கு கண்ணாடி அணிந்திருந்தார்," என்று அதிகாரி கூறினார்.

Getup Changed Youth in Tamil

பயணிமீது ஏற்பட்ட வலுவான சந்தேகத்தின் பேரில் மேலும் விசாரணையைத் தொடர்ந்தபோது தனது சரியான அடையாளத்தை குரு சேவக் சிங், 24 என வெளிப்படுத்தினார். மேலும் இந்த பெயரில் உள்ள பாஸ்போர்ட்டின் புகைப்படமும் அவரது மொபைல் போனில் காணப்பட்டது என்று அதிகாரி கூறினார்.

போலி பாஸ்போர்ட் மற்றும் ஆள்மாறாட்டம் வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைக்காக பயணி தனது உடைமைகளுடன் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார், என்றார் விமான நிலைய அதிகாரிகள்.

Getup Changed Youth in Tamil

வயதான தோற்றத்தில் சென்றால் எந்த சோதனையும் செய்யப்படாமல் இலகுவாக கனடா சென்றுவிடாலாம் என்று எண்ணிய இளைஞனுக்கு இப்போது காப்பு மாட்டப்பட்டுள்ளது. அதுக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட்டிலேயே போயிருக்கலாம்.

இளமையாகத்தோன்ற கருப்பு மை பூசும் வயதானவர்கள் மத்தியில் ஒரு இளைஞன் வயதான தோற்றத்திற்கு வெள்ளை சாயம் பூசியது புதுக்கதையாக இருக்கு. இது எப்டீ இருக்கு..? 

Tags:    

Similar News