200 வீடுகள்..! 70 லட்சம் பணம்..! பெண்ணின் கடுமையான உழைப்பு..! அசந்துடுவீங்க..!
200 வீடுகளில் இருந்து 7 மில்லியன் டாலர்களை திருடிய பெண் தனது திருட்டு டெக்கினிக்குகளை வெளிப்படுத்தினார்.
A Woman's Heist,Homes,Break In,Florida
அந்தப் பெண் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து விளையாடிய அனைத்து நுணுக்கமான விவரங்களையும் வெளியிட்டார். இப்படியான நுணுக்க திருட்டுகளால் அவருக்கு சுமார் $7 மில்லியன் கிடைத்துள்ளது. அந்தப்பணம் இந்திய மதிப்பில் அது ரூ.70 லட்சங்கள்.
ஜெனிபர் கோம்ஸ், ஒரு பூனைக் கொள்ளையர். அட ஆமாங்க பூனை வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அவ்வளவு மென்மையான நடை. அதைப்போலத்தான் ஜெனிபர் திருட்டும். சிறிதும் சந்தேகம் இல்லாமல் திருடுவது அவரது ஸ்பெஷல் பாணி.
A Woman's Heist,
சமீபத்தில் 'லாக்ட் இன் வித் இயன் பிக்' என்ற போட்காஸ்டில் தோன்றி, ஒரு திருடியாக தனது தொழில் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தினார். அவர் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து விளையாடும் அனைத்து நுணுக்கமான விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலமாக அவருக்கு சுமார் $7 மில்லியன் கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.70 லட்சங்கள் சம்பாதித்துள்ளார். சாரி.. திருடியுள்ளார். அவரது அணுகுமுறையை நேரடி செய்முறை விளக்கங்களை செய்துகாட்டும் விதமாக புளோரிடாவில் உள்ள சில செல்வந்தர்கள் வாழும் பகுதிகளுக்கு அவரை அழைத்துச் செல்ல வலியுறுத்தினார். அதன்படி அவர் அழைத்துச் செல்லப்பட்டு அவரது திருட்டு உத்திகளை நேரடி காட்சியாக விளக்கினார்.
நியூயார்க் போஸ்ட்டின் படி, போட்காஸ்டில் உள்ள 41 வயதான அந்த பெண் , "எனக்கு எப்போதும் நல்ல செல்வமுள்ள வீடுகள் வேண்டும். அதாவது, குறைந்தபட்சம் மில்லியன் டாலர் வீடுகள் வேண்டும். நான் எப்பொழுதும் ஒரு வீட்டில் இருக்கும் செல்வசெழிப்பைக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன். குறிப்பாக ஒருபக்கம் மூடிய தெருவாகத் தேர்ந்தேடுப்பேன். ஏனெனில் என்னை எங்கு கண்டுபிடிக்க முடியாது.
A Woman's Heist,
ஒரு திறந்த தெருவுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு வீட்டில் என் பெற்றோர் இருவரும் மருத்துவராக இருந்ததால், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நான் அவர்களின் கொல்லைப்புறத்தில் வரும்போது வேலியை நான் மறைப்பாக பயன்படுத்த முடியும்.
கோம்ஸ் வீடுகளுக்குள் நுழையும் போது மழை காலநிலையை விரும்புவதாகவும் அந்த செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. "ஏனென்றால், மழைக்காலங்களில் மக்கள் வெளியில் இருக்கமாட்டார்கள்.அவர்கள் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்கள். இயற்கையை ரசித்துக்கொண்டு தேநீர் அருந்துவதும் இல்லை. அக்கம் பக்கத்தில் யாரும் ஜாகிங் செய்வதில்லை. இப்படி வெளியில் யாராவது இருந்தால் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் என்னைப் பார்க்க முடியும். ஜன்னலில் மழைத் துளிகள் உள்ளன. எனவே அவர்கள் வெளியே என்ன இருக்கிறது அல்லது நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்கமுடியாது. அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது."
A Woman's Heist,
கோமஸ் இந்த அடிப்படை விவரங்களில் ஒரு தீவிரமான கவனம் கொண்டுள்ளார். மேலும் பாதுகாப்பு அமைப்புகளின் சிறிய விஷயங்களில் கூட அதிக கவனம் செலுத்துகிறார். இந்த அணுகுமுறை ஒவ்வொன்றும் அவர் எடுக்கக் காத்திருக்கும் மதிப்புமிக்க சொத்துக்களின் எச்சரிக்கைக் கொடிகளாகப் பார்க்கிறார்.
பாட்காஸ்டில், பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட வீடுகளில் அவர்கள் எதையாவது பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்று அவர் கூறினார். அது தனக்கு ஒரு நல்ல விஷயமாக மாறியது. அலாரம் அமைப்பைப் பற்றி அவர் அறிந்துகொள்ள விரும்பி, அலாரம் குறித்த விபரங்களை அறிந்துகொண்டதாக கூறினார். அதை துருவி துருவி தேடி அறிந்துகொள்ள முயன்றதாக கூறினார்.
தன் தந்திரங்களை மேலும் விவரித்தபோது," வீட்டில் யாரும் இல்லாதபடி பார்த்துக்கொள்வேன். உள்ளே இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள "நான், 'மிஸ் சாரா, மிஸ் சுசானே. ஏய், நீ உள்ளே இருக்கிறாயா? ஏய்! திற. வாசல் வா. உன் மகள் உன்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள்.' இப்படி ஏதாவது பேசி உள்ளிருந்து குரல் வருகிறதா என்பதை அறிந்துகொள்வேன் என்றார்.
A Woman's Heist,
யாராவது இருந்தால், கம்முனு போய்டுவேன்.
திருடச் செல்லும்போது மேக்கப் எதுவும் போடுவதில்லை, வெவ்வேறு அளவுகளில் ஷூக்களை தேர்வு செய்து அணிவது வழக்கம். எளிமையான செவி இம்பாலாவில் (chevy impala) பயணிப்பது தனி ஸ்டைல்.
இப்படி நம் ஊரில் இவ்வளவு விளக்கமாக தங்களது திருட்டை விளக்கமாக சொல்வார்களா..?