வாலிபரின் காதல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை – வாலிபர் கைது

வாலிபரின் காதல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்;

Update: 2025-05-03 09:30 GMT

காதல் தொல்லையில் பிளஸ் 2 மாணவியின் உயிரிழப்பு:

பெருந்துறை அருகே கோபிநாதன்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவரின் இளையமகள் தாரணி (18), விஜயமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்துப், விடுமுறையிலிருந்து பெருந்துறையில் உள்ள கார்மென்ட் நிறுவனத்தில் தற்காலிக வேலை செய்து வந்தார். வேலைக்குச் சென்று வந்த தாரணிக்கு, பவானி அருகே பி.கே.புதூர், முனியனூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (29) என்ற வாலிபர், தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தாரணி, கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் அடிப்படையில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி, தாரணியின் தற்கொலைக்கு காரணமாகக் கருதப்படும் ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், இளம்பெண்கள் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

Tags:    

Similar News